புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு – நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல தெரிவிப்பு!

Tuesday, August 11th, 2020

நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்காக மூன்று நாள் பயிற்சி கருத்தரங்கை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புரிமை, நாடாளுமன்ற வரலாறு, நிலையியல் கட்டளைச் சட்டங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகள் சம்பந்தமாக புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கருத்தரங்கின் மூலம் விளக்க உள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பமானதும் பயிற்சி கருத்தரங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் நாடாளுமன்றத்திற்குகு 60 புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தேசிய பட்டியல் ஊடாகவும் பல புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இம்முறை நாடாளுமன்றத்தில் 78 புதிய உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் கூறியுள்ளார்.

சில கட்சிகள் தமது தேசிய பட்டியலை இதுவரை சமர்பிக்கவில்லை என்பதால், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: