புதிய நடைமுறையில் பிணை முறிப்பத்திர விற்பனை – மத்திய வங்கி!

Saturday, July 16th, 2016

திறைசேரி பிணை முறிப்பத்திரங்களை வெளியிடுவது சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து, மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளிப்படை தன்மை கொண்ட, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை ஒன்றை ஏற்படுத்துவது குறித்து இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல்களில் ஊழல், மோசடிகள் நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுவதால், மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் ஏல விற்பனை மூலம் பிணை முறிப்பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. நேரடி மற்றும் ஏல விற்பனை மூலம் பிணை முறிப்பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. உலகில் உள்ள ஏனைய நாடுகள் ஏல விற்பனை மூலம் மாத்திரமே பிணை முறிப்பத்திரங்களை விற்பனை செய்வதில்லை எனவும் கலப்பு முறையை கையாள்வதே சர்வதேச நடைமுறை எனவும் இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் இது சம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து மிகவும் பொருத்தமான நடைமுறையின் கீழ் பிணை முறிப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Related posts: