புதிய நடைமுறையின் கீழ் திறைசேரி முறிகள் விநியோகம்!

Thursday, July 27th, 2017

இன்று முதல் புதிய நடைமுறையின் கீழ் திறைசேரி முறிகள் விநியோகிக்கப்படுமென்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதியமைச்சர் விளக்கமளித்தார்.புதிய நடைமுறையின் கீழ் திறைசேரி முறிகள் விதிமுறைகளுக்கமைவான விநியோகம் இடம்பெறும். இதன் கீழ் இந்த நடைமுறை மூலம் திறைசேரி முறிகள் விநியோகம் குறித்த தகவல்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய முறையின் கீழ் மாதமொருமுறை திறைசேரி முறிகள் தொடர்பான ஏல விற்பனை இடம்பெறும் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

வட்டி விகிதாசார முகாமைத்துவத்தை இதன் மூலம் மேற்கொள்ள முடிவதுடன் அது பெரும் இலாபகரமாக அமையுமென்றும்  பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.இரண்டு தொகுதிகள் மாத்திரமே சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு மாதமும் 15ம் திகதி திறைசேரி முறிகள் விநியோகிக்கப்படும். போட்டி மிகுந்த ஏலவிற்பனைஇ போட்டியற்ற ஏலவிற்பனை கட்டாய பரிமாற்றம் உள்ளிட்ட மூன்று நடைமுறைகளில் திறைசேரி முறிகள் ஏல விற்பனை; இடம்பெறும். அரிதாகவே  கட்டாய பரிமாற்ற இடமபெறும் என்றும்  தேசிய கொள்கை மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: