புதிய தூதுவராலயங்களைத் திறக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2017

தேவைப்படும் இடங்களில் புதிய தூதுவராலயங்களைத் திறப்பதற்குத் தயாராகவுள்ளதாகவும் அனைத்து இலங்கை தூதுவராலயங்களிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிவிவகார அமைச்சின் செயற்பாடுகளை செயற்திறனுள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் இன்று மக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் மங்கள சமரவீர, பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நவீனமயப்படுத்தப்பட்டுள்ள கொன்சியூலர் அலுவலகத்தில் வெளிவிவகார மற்றும் அதனுடன் தொடர்புபட்ட பல சேவைகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன

mangala

Related posts: