புதிய சேவைப் பிரமாணக் குறிப்பினால் பாதிக்கப்பட்ட அதிபர்களுக்கு பதவியுயர்வு கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, March 31st, 2017
இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பினர் பாதிக்கப்பட்ட அச்சேவையின் 2அம் வகுப்பின் 1ஆம் தர அதிபர்கள் யாவரும் 01.07.2008 ஆம் திகதி முதல் இலங்கை அதிபர் சேவையின் 1ஆம் தரத்திற்கு பதவி உயர்த்தப்படுவர் என கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் எஸ்.ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.
முன்னைய அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய, இலங்கை அதிபர் சேவை 2-I இல் உள்ளோர் புதிய சேவைப் பிரமாணக் குறிப்பிற்கமைய இலங்கை அதிபர் சேவை 2ஆம் வகுப்பிற்கு உள்வாங்கப்பட்ட போதும் அவர்களுக்கான சம்பள மாற்றங்களைச் செய்ய முடியாமல் இருந்தது. இது தொடர்பாக தேசிய சம்பள ஆணைக்குழு தாபனப் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடனும் அரச சேவை ஆணைக்குழுவுடனும் கலந்துரையாடியதற்கமைய அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பில் மாற்றம் செய்யப்பட்டு 2004/59 இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகை வெளியிடப்பட்டது இதற்கமைய இலங்கை அதிபர் சேவை 1ஆம் தரத்திற்கு பதவியுயர்வு வழங்கி அரச நிர்வாக அமைச்சின் 28/2010 ஆம் இலக்க சுற்று நிருபத்திற்கமைய 01.01.2011 முதல் நிலுவையுடன் உரிய சம்பளம் வழங்கப்படும்.
இத தொடர்பான பாதிக்கப்பட்ட அதிபர்களின் பெயர்ப் பட்டியல் வலயங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை அதிபர் சேவை 1ஆம் தரத்திற்கான பதவியுயர்வு கடிதம் கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளதென இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கச் செயலர் ஏ.எல்.எம்.முக்தார் அறிவித்துள்ளார்.
Related posts:
|
|