புதிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர் – சுகாதார அதிகாரி எச்சரிக்கை!

புதிய திரிபடைந்த கொரோனா சமூகத்திற்குள் காணப்படலாம் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் புதிய திரிபடைந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் சமூகத்திற்குள் காணப்படலாம் எனவும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இலங்கைக்குள் வருபவர்களை சோதனையிடும் மாதிரிகளை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. புதிய திரிபடைந்த வைரசினால் ஆரம்பகட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள இன்னமும் அடையாளம் காணப்படாத சிலர் சமூகத்திற்குள் நடமாடும் சாத்தியக்கூறுகள் உள்ளன எனவும் சுடத்சமரவீர எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பதிவு இன்றி வெளிநாடு செல்வோர் பற்றி தகவல் அறிய முடியாத சிக்கல் நிலை!
எல்லை நிர்ணய அறிக்கையில் குறைபாடுகள் இல்லை - தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகப்பு - சிறைச்சாலைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வில் கலந்...
|
|