புதிய கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு – முதற்கட்ட பணி பூர்த்தி!

Friday, August 4th, 2017

2016 – 2017 கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்தன் பின்னர் முதற்கட்டமாக நிலவிய வெற்றிடங்களை பூர்த்தி  செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.

தற்போது இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர் விபரம் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அடுத்த மாதம் அனுப்பப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts: