புதிய கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிப்பு!

Wednesday, September 23rd, 2020

புதிய கண்டுபிடிப்புகளை கொண்ட நாடொன்றை கட்டியெழுப்பும் வகையில் சூழலை உருவாக்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மற்றும் சர்வதேச சந்தை தேவையை பூர்த்தி செய்வதற்காக சர்வதேச தரத்தில் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (22) மாலை இடம்பெற்ற திறன் விருத்தி, தொழிற்கல்வி, கண்டுபிடிப்புகள் அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது அவதானம் செலுத்தினார்.

உயர்கல்வி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் அவசியம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Related posts: