புதிய கடற்படைத் தளபதி நியமனம்!

Monday, December 31st, 2018

இலங்கை கடற்படையின் 23 ஆவது புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று(31) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனக் கடிதத்தினை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கான கடற்படை கட்டளைத் தளபதியாக கடந்த ஒன்றரை வருடங்களாகப் பணியாற்றி வந்த இவர் அண்மையில் கொழும்பு கடற்படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: