புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் – உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்தும் கவனம்!

Monday, April 24th, 2023

புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,714 ஆகக் குறைக்க எல்லை நிர்ணய ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதன் மூலம், 8,000 க்கும் அதிகமான மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் பிரகாரம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டுமாயின், அது குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

இது தொடர்பாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: