புதிய உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு!

புதிய உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்கும் நடவடிக்கை அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
பெண்களின் 25 சதவீத பிரதிநித்துவம் தொடர்பாக சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன. பெண்களுக்கு 25 சதவீதமான பிரதிநிதித்துவத்தை வழங்க அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது. இதற்கமைய 25 சதவீதமான பெண் பிரதிநிதித்துவத்தை பேணக்கூடிய வகையில் உள்ளுராட்சி மன்றங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் பற்றி நீதிமன்ற தீர்ப்பிற்கு அமையஇ எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுமாறு அமைச்சர் சகல அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொண்டார்
Related posts:
40 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக இணைக்கத் திட்டம் -கல்வி அமைச்சர் !
அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம் - மத்திய வங்கி!
சட்டமுரணாக அமைக்கப்பட்டவை அல்ல யாழ் நகர பழக்கடைகள் - றெமீடியஸ் தெரிவிப்பு!
|
|