புதிய ஆண்டுக்கான பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

Wednesday, January 1st, 2020

2020 ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை (02) ஆரம்பமாகவுள்ளது. 2019 ஆம் ஆண்டு கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையின் விடை தாள் திருத்தும் பணிகளின் முதல் கட்டம் கடந்த 26 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையில் இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் முதல் கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் 56 நகரங்களில் உள்ள 84 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 110 நிலையங்களில் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் 47 பாடசாலைகள் ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஏனைய 37 பாடசாலைகளும் நாளை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: