புதிய அவசர சிகிச்சைப் பிரிவு அடுத்த மாதம் ஆரம்பம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Wednesday, July 25th, 2018

யாழ் போதனா வைத்தியசாலையில் அடுத்த மாதம் முதல் அவசர சிகிச்சைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு அடுத்த மாதம் 17 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதற்கு மேலாக புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற கட்டடத்துடன் அதனை நான்குமாடியாக அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக 200 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அரியாலைப் பகுதியில் ஒருவர் வைத்தியசாலைக்காக இரண்டு ஏக்கர் காணியை அன்பளிப்புச் செய்துள்ளார். அந்தக் காணியில் கண் வைத்தியசாலையை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Related posts: