புதிய அரசியல் யாப்பில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முக்கித்துவம் – அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி!

உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முக்கித்துவம் வழங்கப்படும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
கிராமிய பிரதேச அபிவிருத்திக்கு பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தேவையான ஒழுங்குவிதிகள் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர அரசியல் யாப்பு தொடர்பாக தெரிவிக்கையில் அரசியல் யாப்பு என்பது நாடு ஒன்றின் நிர்வாகத்தின் அடிப்படை சட்டமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக பொதுமக்களின் அபிலாசைகள் மற்றும் உரிமைகள் இதன்மூலம் உறுதிசெய்யப்படவேண்டு;ம் என்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
காலத்திற்கு பொருத்தமான வகையில் இலங்கையர் என்ற ரீதியில் முன்னோக்கி பயணிப்பதற்கான கொள்கை புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|