புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான அறிக்கை வடக்கின் முக்கியஸ்தர்களிடம் கையளிப்பு!

புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி செய்யப்பட்ட அறிக்கையை அக்குழுவின் உறுப்பினரும்இ ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமாகாணசபை உறுப்பினரும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ். தவராஜா யாழ்.மாவட்டத்திலுள்ள முக்கியஸ்தர்களிடம் கையளித்துள்ளார்.
மக்கள் கருத்தறியும் குழுவின் இறுதி அறிக்கை கடந்த 31 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடமும்இ மறுநாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபா நாயகர் கருஜெயசூரிய ஆகியோரிடம் கையளிக்கப்பட்டிருந்ததுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் 01 ஆம் திகதியும் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த புதிய அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் உறுப்பினராக எஸ். தவராஜா அவர்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஈழமக்கள் ஜனநாயக கட்சிய சார்பாக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|