புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர இதுவே பொருத்தமான தருணம் – பேராசிரியர் சரத் விஜேசூரிய!

Friday, March 17th, 2017

நாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கான பொருத்தமான சந்தர்ப்பமும் காலமும் கனிந்து வந்துள்ளதாக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

“புதிய அரசியலமைப்புக்கான தேசிய அமைப்பு” ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகளின் உதவியின்றி எந்த வகையிலும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியாது எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பலர் கலந்து உரையாற்றியுள்ளனர்.


விபத்தில் மன்னார் நீதவான் படுகாயம்!
புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!
மறைந்த தமிழக முதல்வருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் துக்கம் அனுஷ்டிப்பு!
பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு உடனடி இடமாற்றம்!