புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றுக்கு வரும்?

Tuesday, July 17th, 2018

புதிய அரசியலமைப்புக்கான சட்டமூல வரைபுகள் எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அரசியலமைப்பு தயாரிப்புக்கான விசேட சட்ட நிபுணர்களின் புதிய அரசியலமைப்பு சட்டமூல வரைபு நடவடிக்கைக்குழு சட்டவரைபுகளால் பூர்த்தி செய்துள்ள நிலையில் இந்த வரைபுகளைத் தொகுக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் எதிர்வரும் வாரங்களில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் புதிய அரசியலமைப்பின் சட்டமூல வரைபுகள் நாடாளுமன்றத்துக்கு விவாதங்களுக்காகவும் அனுமதிக்காகவும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் நடவடிக்கையில் அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பு வரைபைத் தயாரிக்கும்படி அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மாறுபட்ட ஆலோசனைகளை உள்ளடக்கி புதிய அரசியலமைப்புத் தயாரிப்பதில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் அவர்களது ஆலோசனைகளைக் கருதாது அதற்கு அப்பால் செயற்பட வேண்டிய நிலை அரசியலமைப்பு நடவடிக்கைக் குழுவினருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த வகையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் விசேட சட்ட வல்லுநர்களிடையேயும் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான சட்டவமைப்பு சம்பந்தப்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே தற்போது புதிய அரசியலமைப்புக்கான சட்டமூல வரைபுகள் பூர்த்தி செய்யப்படும் நிலையில் உள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts: