புதிய அரசியலமைப்புக்காகவே மக்கள் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளித்துள்ளனர் – மகா சங்கத்தினர் தெரிவிப்பு!

Sunday, September 13th, 2020

பொருத்தமான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு மக்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மக்கள் எதிர்பார்ப்பை கட்டம் கட்டமாக நிறைவேற்றி தன்னிறைவான பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் பயணத்தை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்..

வரலாற்று முக்கியத்துவமிக்க அனுராதபுரம் அட்டமஸ்தானவில் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள் லங்காராமய மிரிசவெட்டிய மற்றும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரைகளுக்கு சென்ற வேளையிலேயே விகாராதிகாரி தேரர்கள் இதனை தெரிவித்தனர்.

லங்காராம விகாரைக்கு சென்ற ஜனாதிபதி விகாராதிகாரி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரரை சந்தித்து உரையாடினார். விகாரையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள் புனித பூமிக்கு வருகை தந்திருந்த பக்தர்களுடனும் உரையாடினார்.

ஜனாதிபதி அவர்கள் மிரிசவெட்டிய விகாராதிகாரி சங்கைக்குரிய ஈத்தல வெட்டுனுவெவே ஞானதிலக்க நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் சங்கைக்குரிய நுகேதென்னே ஸ்ரீ பஞ்ஞானந்த தேரரை சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: