புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைவு தொடர்பான நிபுணர் குழுவின் ஆய்வு அறிக்கை இந்தமாத இறுதியில் அரசாங்கத்திடம் ஒப்படைப்பு!

Sunday, March 7th, 2021

புதிய அரசியலமைப்பின் ஆரம்ப வரைவு இந்தமாத இறுதியில், அதனை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினால் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

புதிய அரசியலமைப்பு சபையை உருவாக்குவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி ரோமெஷ் டி சில்வா தலைமையில் குறித்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குறித்த காலப்பகுதியில் இந்த குழுவால் அனைத்து கட்சி தலைவர்கள், சமையத்தலைவர்கள, சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளும் பெற்றப்பட்டிருந்தன.

பின்னர் அந்த யோசனைகளை விரிவாக ஆராய்ந்து சில வாரங்களுக்கு முன்னர் சட்டமூலம் தயாரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இந்த மாத இறுதியுடன் நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ காலம் நிறைவடையவுள்ளதுடன் அதற்கு முன்னர் புதிய அரசியலமைப்பின் வரைவு, நீதியமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் அந்த வரைவு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு நீதி சட்டமூல திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றுமு; தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னரே புதிய அரசியலமைப்பின் வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: