புதிய அரசமைப்பு அறவே வேண்டாம் – எஸ்.பி திஸாநாயக்க!

Sunday, July 16th, 2017

புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை இந்த அரசுக்கு இல்லை. மக்கள்ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்ய முடியாது. ஆகவே, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை இத்தோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரின.

ஆனால், எந்தக் கட்சிக்கும் மக்கள் ஆணை வழங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆசனங்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்தக் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை.

அதேபோல் ஸ்ரீசுதந்திரக்கட்சிக்குக் கிடைத்த ஆசனங்களின் எண்ணிக்கையைக் கொண்டும் அந்தக் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான் இரண்டு கட்சிகளும்இணைந்து ஆட்சியமைத்தன. எந்தக் கட்சி வென்றாலும் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்கும் என்று கூறினாலும் கூட விரும்பியோ விரும்பாமலோ இரண்டு கட்சிகளும் சேர்ந்தே ஆட்சியமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு எதிராக இன்று நாட்டில் எதிர்ப்புகளும் உள்ளன.  பௌத்தபீடங்கள் கூட எதிர்க்கின்றன. மக்கள் ஆணை இல்லாத ஒரு வேலையைச் செய்யப்போனால் பிரச்சினைகளும் எதிர்ப்புகளும் வரவே செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts: