புதிய அமைச்சுக்களின் கடமைகள் தொடர்பான வர்த்தமானி விரைவில்!

Wednesday, May 24th, 2017

புதிய அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவான கடமைகள் எதிர்வரும் 5 நாட்களில் வர்த்மானியில் அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி புதிய அமைச்சுக்களின் பல கடமைகள் மாற்றப்படவுள்ளன

இதனுடன் தற்போது அமைச்சரவை அமைச்சுக்களில் காணப்படும் பல நிறுவனங்கள், புதிய அமைச்சுக்களின் கீழ் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த காலங்களில் பிரச்சினைகள் நிலவிய அமைச்சுக்களின் கடமைகள் இதன்படி மாற்றப்படவுள்ளது நிதி, வெளிவிவகாரம், துறைமுகம் மற்றும் ஊடகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சு பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை மாற்றம் நேற்று இடம்பெற்றது

இதன்படி அமைச்சரவை அமைச்சுக்கள் 9 உம், ஒரு இராஜங்க அமைச்சு சம்பந்தமான புதிய அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

Related posts: