புதிய அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் இன்று ?

Thursday, April 12th, 2018

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் இன்று மாலை சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் எதிர்வரும் புத்தாண்டின் பின்னர் தற்போது இடைவெளியாகியுள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

16 சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் பதவி விலகியதை அடுத்து அந்த இடைவெளிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த அமைச்சுப் பொறுப்புக்கள் பெரும்பாலும் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே பிரதமருக்கு எதிரான அவ நம்பிக்கை பிரரேரணைக்கான வாக்கெடுப்பில் பங்குகொள்ளாத சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக அவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

Related posts: