புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலைய திறக்கப்படும் – விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி அறிவிப்பு!

புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.
விமான நிலையம் திறக்கப்பட்டாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் தொடர்பில் சுகாதார பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.பல்கலை மாணவர் படுகொலை: ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
வித்தியா வழக்கோடு தொடர்புபட்ட இராஜாங்க அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாடாளுமன்றில் மகிந்...
நான் சமூகங்களுக்கிடையில் ஒரு பாலமாக இருக்க விரும்புகிறேன் - குற்றச்சாட்டுகளை யோசித்துக் கொண்டிருக்க ...
|
|