புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான 30 பேர் கொண்ட அமைச்சரவை நாளை சத்தியபிரமாணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளன.
30 பேர் அமைச்சரவை அமைக்க வேண்டுமெனின் நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை கொண்டு வர வேண்டும். இதனால் அமைச்சரவை நியமனத்தை இரண்டு நாட்களுக்கு பின்நகர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சராக பதவியேற்கவுள்ளார். சட்ட மா அதிபர் திணைக்களத்தையும் ஜனாதிபதி பொறுப்பேற்கவுள்ளார்.
Related posts:
உடைந்து வீழ்ந்த கட்டடத்தின் உரிமையாளர் கைது!
வாகன உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!
48 மணி நேரத்தின் பின்னர் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானம் - அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெ...
|
|