புதிய அஞ்சல் நிலைய நிர்மாணத்துக்கு தனியாரின் ஒத்துழைப்பை பெற தீர்மானம் – அஞ்சல்துறை அமைச்சர் நடவடிக்கை!

Tuesday, November 16th, 2021

புதிய அஞ்சல் நிலையங்களை நிர்மாணிப்பதற்காக நாட்டின் பல பாகங்களில் இலங்கை தபால் திணைக்களத்தினால் காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், நிர்மாணப் பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு இன்மையால் இதுவரையில் அதற்கான கட்டடங்களை நிர்மாணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகக் காணி வழங்கப்பட்டுள்ள பிரதேசங்களில் தனியாரின் ஒத்துழைப்புடன் இக்கட்டடங்களை பல்நோக்கு கட்டடங்களாக நிர்மாணிப்பதற்கான யோசனையை அஞ்சல்துறை அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

புதிய கட்டட தேவைகளை பூர்த்தி செய்யும் அதேவேளை, அஞ்சல் திணைக்களத்திற்கு மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெறும் என அமைச்சரவை பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஞ்சல் திணைக்களத்தின் கீழ் தற்போது 654 பிரதான அஞ்சல் அலுவலகங்களும் 3 ஆயிரத்து 410 உப அஞ்சல் அலுவலகங்களும் காணப்படுகிறது.

தற்போது, தபால் திணைக்களத்திற்கு சொந்தமான 654 பிரதான தபால் அலுவலகங்களில் 154 அலுவலகங்கள்,  தனியார் வாடகை  கட்டடங்களில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: