புதியவீட்டுத் திட்டத்தின், மாதிரி வீடமைப்பை ஈ.பி.டி.பியின் விஷேடகுழுவினர் பார்வையிட்டது.

Wednesday, April 25th, 2018

மீள்குடியேற்ற அமைச்சினால் பதுளையில் அமைக்கப்பட்டுள்ள புதியவீட்டுத் திட்டத்தின் மாதிரிவீட்டை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வழிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்டுத்தப்படவுள்ள மேற்படி வீட்டுத்திட்டமானது இரண்டுவாரத்தில் கட்டிமுடிக்கக்கூடியதும், அரசுக்கு நீண்டகாலகடன் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படுவதால் எமது மக்களுக்கு இலவசமாகவும் கிடைக்கக் கூடியதுமான இவ்வீட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளை கட்டித்தரமுடியும் என்றுமீள் குடியேற்ற அமைச்சுதெரிவித்துள்ளது.

இரண்டு அறைகள், சமையலறை, இணைந்த குளியலறையுடன் மலசல கூடம், விறாந்தை அடங்கலாக 650 சதுர அடியில் அமையப்பெறும் இம்மாதிரிவீட்டினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்ட அமைப்பாளர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் நேற்று (24.04.2018) பதுளைக்குச் சென்று பார்வையிட்டனர்.

குறித்த மாதிரி வீடு வடக்கு மாகாணத்திற்கு பொருத்தமானதா? என்பதுடன் வீட்டின் அளவு, விஸ்தீரணம், சுவாத்தியவசதிகள் என்பனவற்றையும் குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் எமது பிரதேச மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்புடையதா? எனவும் ஆராய்வு செய்ததுடன் அதில் செய்யப்படவேண்டிய சில சிறுமாற்றங்கள் குறித்தும் தமது பரிந்துரைகளிளையும், ஆலோசனைகளையும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வழிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் அவரது செயலாளர் ஆகியோரிடமும் இன்று (25.04.2018) அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து தெரிவித்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினரின் கருத்துக்களைக் கேட்டறிந்த அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள், குறிப்பிட்ட வீட்டுத்திட்டத்தில் ஈ.பி.டி.பி முன் வைக்கும் கோரிக்கைகளையும், ஆலோசனைகளையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்பதுடன், வீட்டுத் திட்டத்தை அமுலாக்கம் செய்வதிலும், பயனாளிகளை உறுதிப்படுத்துவதிலும் விஷேடபொறிமுறை அவசியமென்ற ஈ.பி.டி.பியின் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாகவும் உறுதியளித்தார்.

அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சின் செயலாளர் சுரேஸ் பொன்னையன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேடகுழுவில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்புச் செயலாளர்களான, ராஜ்குமார், மகேஸ்வரன், ஊடகச் செயலாளர் ஸ்டாலின், வடமாகாணசபையின் உறுப்பினரும், கிளிநொச்சி மாவட்டநிர்வாகச் செயலாளர் தவநாதன், யாழ். மாவட்ட மேலதிகச் செயலாளர் சிறீரங்கேஸ்வரன், கோப்பாய் பிரதேசநிர்வாகச் செயலாளரும், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான ஐங்கரன், வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளர் திலீபன், மன்னார் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சந்துரு ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

31230252_1643792705736927_6421198435839741900_n
31183550_1643792829070248_450123954538041885_n31239484_1748230685216011_5122161891082240000_n

IMG_1502

IMG_1495

IMG_1498

IMG_1500

Related posts: