புதிதாக 3000 மொழிபெயர்ப்பு அதிகாரிகள் நியமனம்!

Sunday, April 1st, 2018

புதிதாக மேலும் மூவாயிரம் மொழிபெயர்ப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ், 500 மொழி பெயர்ப்பு உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். இது தொடர்பான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் முதல் ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்தப் பதவிக்கு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இரண்டு மொழிகளிலும் சித்தி பெற்றிருப்பதுடன், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்க முடியும்.

Related posts: