புதிதாக 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்!

Saturday, May 5th, 2018

வடமாகாணத்தில் கடமையாற்ற புதிதாக 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு  அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் இன்று சனிக்கிழமை (05)  காலை 8.30 மணியளவில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன

வடமாகாண சபையின் கீழ் உள்ள பொது நிர்வாக சேவைகள் திணைக்களத்திற்குட்பட்ட  வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிற்கும் 23 பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் 23 பேரும், எதிர்வரும் 5 வருடங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா உள்ளிட்ட திணைக்களங்களில் கடமையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: