புதிதாக வேலைவாய்ப்பு வழங்கிய 50 ஆயிரம் பேரின் பெயர் பட்டியல் வெளியானது !

Monday, August 17th, 2020

வேலைவாய்ப்பு பெற்ற 50 ஆயிரம் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று பெயர் பட்டியலை பார்வையிட முடியும் என அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமன கடிதம் எதிர்வரும் நாட்களிலும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதிய நியமனம் பெற்ற 50 ஆயிரம் பட்டதாரிகளும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி தங்களுக்கு அருகில் உள்ள பிரதேச செயலகங்களில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேரின் வேலை வாய்ப்பு தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் முதல் அதற்கான செயலணி நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான வேலைத்திட்டங்களை இடைவிடாமல் முன்னெடுத்து செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: