புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள் கடமைகளை பெறுப்பேற்பு!

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்ற அமைச்சர்கள் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
இதற்கமைய, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் கைத்தொழில் அமைச்சு பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
அதேநேரம், உதய கம்மன்பில நீக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய வலுசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட காமினி லொக்குகே இன்று முற்பகல் வலுசக்தி அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
அத்துடன் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திலும் அமுனுகம மற்றும் தற்காலிகமாக தமது பதவியில் இருந்து விலகிய இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ ஆகியோரும் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
ஜனாதிபதியினால் அண்மையில் அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட்டதை அடுத்து இன்றையதினம் முதலாவது அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|