புதிதாக நியமனங்களை பெறுவோருக்கு 2 வருடகாலத்துக்கு இடமாற்றம் தடை!

சுகாதாரத் துறையில் புதிதாக நியமனங்களை பெறுபவர்களுக்கு 2 வருட காலத்துக்கு இட மாற்றத்தை வழங்க வேண்டாம் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
புதிதாக நியமனங்களை பெறுவோருக்கு சில சந்தர்ப்பங்களில் இடமாற்றங்கள் வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் சேவை நிலையத்தில் பணியாற்றவேண்டும் என்றும் நியாயமான காரணங்களின் அடிப்படையில் மாத்திரம் இடமாற்றம் வழங்கப்படவேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கியூபத் தூதுவர் - வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் சந்திப்பு!
2023 ஆம் ஆண்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 10,000 முறைப்பாடுகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு அத...
பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது - மத்திய...
|
|