புதிதாக இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பு!

இலங்கையின் மின்சாரம் தொடர்பான தெரிவுசெய்யப்பட்ட திட்டத்திற்கு அமைவாக சம்பிரதாயம் அல்லாத மாற்று புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மின்சார தேவையில் மூன்றில் ஒன்றை பூர்த்தி செய்து கொள்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக மின்சார சபையினால் தயாரிக்கப்பட்டடுள்ள 2018 -2037 நீண்டகால திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டளவில் தேசிய மின்சார கட்டமைப்புடன் தொடர்புபடுத்த வேண்டிய 60 மெகா வோல்ட் காற்று மூலமான மின் உற்பத்தி மற்றும் 150 மெகா வோல்ட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான கொள்கை கட்டமைப்புக்கு அமைவாக பெறுகை அலுவல்களை முன்னெடுப்பதற்கு மின் சக்தி மற்றும் பதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
20 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் ஆய்வு செய்ய விஷேட நிபுணர் குழு நியமனம்!
உறவினர் வீடுகளுக்கு செல்வதை மட்டுப்படுத்துங்கள் - சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபு...
சேதன பசளை உற்பத்திக்கான புதிய இயந்திரம் இராணுவத்தினரால் அறிமுகம்!
|
|