புதிததாக முச்சக்கர வண்டி பதிவில் வீழ்ச்சி – நாளாந்தம் 600 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்வதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் !

Saturday, August 22nd, 2020

இலங்கையில் நாளாந்தம் 600 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்வதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 19 ஆயிரத்து 506 உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே புதிததாக முச்சக்கர வண்டி பதிவில் வீழ்ச்சி நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வருடத்தில் புதிதாக 14 ஆயிரத்து 378 முச்சக்கர வண்டிகள் மாத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய நாள் ஒன்றுக்கு புதிதாக 40 முச்சக்கர வண்டிகள் வீதிகளில் இறங்குவதாகவும்  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: