புதனன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி!

Monday, October 30th, 2017

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் புதன்கிழமை அச்சிடப்படவுள்ளதாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இது சமர்ப்பிக்கப்படு மென்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக 4 பிரதேச சபைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அம்பகமுவ மற்றும் நுவரெலிய பிரதேச சபைகள் தலா இரண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளன.இதன் கீழ் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 332 இல் இருந்து 336 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும்.

அதிகரிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைவாக தேவையான வசதிகள் உள்ளுராட்சி மன்றங்களில் செய்து கொடுக்கப்படும். இந்த வசதிகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான அறிவுறுத்தல்கள் விரைவில் வழங்கப்படுமென்று மாகாண சபைகள்இ உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: