புடவை விற்கச் சென்றவர் ஊர்காவற்துறையில் கொள்ளை!

ஊர்காவற்துறை பகுதியில் புடவை விற்கச் சென்று வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்த இரு இந்தியர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இரு இந்தியர்களும் கரம்பன்- நாரந்தனை பகுதியில் புடவை வியாபாரத்திற்காகச் சென்றனர்.
இந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்களின் நகைகளை அபகரித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மண்டைதீவு பொலிஸ் அரணுக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக கொள்ளையடித்த நகைகள் மற்றும் பொருட்களுடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கி அட்டைகள், கடவுச்சீட்டுகள், கடவுள் விக்கிரகங்கள், இந்திய நாணயங்கள், ஓலை சுவடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
|
|