புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கை ஏழு நாட்களுக்குள் முடிவுறுத்த வேண்டும்: யாழ். மேல் நீதிமன்றத்தில் கோரிக்கை

Thursday, June 29th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் எனப்  பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்வம் தொடர்பில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தின் அடிப்படையில் விசாரணைகள் நேற்று புதன்கிழமை(28) யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உள்ளடங்கிய குழுவின் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒன்பது சந்தேகநபர்களும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
இன்றைய அமர்வின் போது பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைகள் ஏழு நாட்களுக்குள் முடிவுறுத்தப்பட வேண்டும் எனப் பதில் சட்டமா அதிபர் இன்றைய விசாரணை அமர்வின் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த வழக்கு விசாரணையின் சிவில் சாட்சியப் பதிவுகள் நாளை ஆரம்பமாகும் எனவும், நிபுணத்துவச் சாட்சியப் பதிவுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: