புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் 23 ஆம் திகதி வரை நீடிப்பு !

Thursday, March 9th, 2017

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும்-23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம். றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்கள்  நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வித்தியா படுகொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களில் ஒருவர் அரச தரப்புச் சாட்சியளராக மாறியுள்ள நிலையில் ஏனைய 11 பேரினதும் விளக்கமறியலே தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts: