புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு !

Thursday, February 2nd, 2017

 

 

கடந்த-2015 ஆம் ஆண்டு புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சி.வித்தியாவின் கொலை வழக்குடன் தொடர்புடைய 11 சந்தேகநபர்களின் விளக்கமறியல் யாழ்.ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (02) நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 பேரில் ஒருவரைத் தவிர 11 பேரும் இன்று யாழ். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது இந்தக் கொலை வழக்குடன் தொடர்புடைய 11 பேரையும் இந்த மாதம்- 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

பத்தாவது சந்தேக நபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும் மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டகாரணத்தால் அவர் யாழ்.மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

unnamed-29 (1)

Related posts: