புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் சம்பந்தப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களின் பிணைக் கோரிக்கையை நிராகரித்த யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்
Wednesday, May 11th, 2016
புங்குடு தீவு மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களின் விளக்கமறியலை மூன்று மாதங்களிற்கு நீடித்து உத்தரவிட்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழக்குடன் சம்பந்தப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களின் பிணைக் கோரிக்கையையும் நிராகரித்தார்.
புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் ஒருவருடமாகியுள்ளமையால் வழக்கு தொடர்பாக மனுதாரர் சார்பாக எதிரிகளின் விளக்கமறியல் நீடிப்புத் தொடர்பாக 04.05.
யாழ். மேல் நீதிமன்றத்தில் ஒன்பது சந்தேகநபர்களும் ஆஜராகியிருந்தனர். சந்தேகநபர்களின் சார்பாக 4 ஆம்.7 ஆம்,9ஆம் சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி சரட் வல்கமகே ஆஜராகி இருந்தார். ஏனைய சந்தேகநபர்கள் சார்பாக எந்த சட்டத்தரணிகளும் ஆஜராகவில்லை.
சட்டமா அதிபர் சார்பாக சட்டத்தரணி சக்கி இஸ்மாயில் ஆஜராகி மனுதாரர் சார்பாக தனது அறிக்கையை மன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்த அறிக்கையைச் செவிமடுத்த நீதவான் சட்டத்தரணிகள் ஆஜராகாத ஏனைய சந்தேகநபர்களது தனித்தனியான கருத்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டார்.இந்தக் கருத்து விண்ணப்பத்தில் சந்தேகநபர்கள் அனைவரும் தாம் அக் குற்றத்தைப் புரியவில்லை எனவும், குற்றப்புலனாய்வு பிரிவினர் தான் எங்களை அச்சுறுத்தி வாக்கமூலத்தை பெற்றனர் என்பதையும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
எனினும் நீதிபதி இளஞ்செழியன் ‘மன்றில் நீங்கள் கருத்து சொல்வதற்கும், சட்டத்தரணி இன்றி உள்ள உங்களுக்கும் (சந்தேகநபர்கள்) கருத்து கூற சந்தர்ப்பம் வழங்கியுள்ளேன், எனவே நீதிமன்றத்திற்கு வெளியே கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை. இதனால் அவசியமற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அது வழக்கின் போக்கினை மாற்றி விடும்‘ என கேட்டுக் கொண்டார்.
இதன் பின்னர் சுவிஸ்குமார் உட்பட இருவருக்கு ஆஜரான சட்டத்தரணி சரத் வல்கமகேவின் விண்ணப்பத்தை செவிமடுத்த நீதவான் துரிதவிசாரணை மேற்கொள்வதற்குக் குற்றப்புலனா
தொடர்ந்து தனது அறிக்கையில் சகல தரப்புகளின் விண்ணப்பங்களையும் அவதானித்த நிலையில் பாதிக்கப்பட்ட மனுதாரர் சார்பாக மேற்கொள்ளப்பட்ட நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஏனைய தரப்பு விண்ணப்பங்களை நிராகரிக்கின்றேன். இதனால் 17 துணை சட்டத்தின் பிரகாரம் இன்றில் இருந்து 3 மாத காலத்திற்கு 9 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிப்பினை உறுதிப்படுத்துகின்றேன். தவிர, ஊர்காவற்துறை நீதவானுக்கு இது தொடர்பாகப் பணிப்புரை விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
இதற்கமைய வழமை போன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற உள்ளதுடன் மூன்று மாத காலம் நிறைவடைந்த பின்னர் எதிர்வரும் 10.08.2016 அன்று மீளவும் குறித்த ஒன்பது சந்தேகநபர்களையும் ஆஜராக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கட்டளை பிறப்பிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
மேற்படி கொலை வழக்கின் சந்தேகநபர்களைக் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம்– 20 ஆம் திகதி யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம் சந்தேகநபர்களை ஆஜர்படுத்துவதற்காக நீதிமன்ற வளாகம் விசேட அதிரடிப் படையினர், பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்குள் கொண்டுவரப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|