புங்குடுதீவு பெண்ணுக்கு கொரோனா தொற்று: மறு அறிவித்தல்வரை உடனடியாக நிறுத்தப்பட்ட படகு சேவை!

நயினாதீவு – குறிகட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை இன்றுமுதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை பயணிகள் கவனத்தில் எடுக்குமாறு படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
பயணிகளும் நிலைமையை புரிந்து கொண்டு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
புங்குடுதீவில் அடையாளம் காணப்பட்ட நோய்த் தொற்றாளரோடு எவரேனும் பயணித்து இருந்தால் உடனடியாக வைத்தியசாலையை நாடி உங்களினதும் மக்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான உதவி பொது செயலாளராகும் எரிக் சொல்ஹெய்ம்
நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு பதவி வழங்க அரசியல்வாதிகள் ஆர்வம் - முன்னாள் ஜனாதிபதி
மக்கள் நலன்களை முன்னிறுத்தியதான மாநகரை வளப்படுத்த நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை: ஈ.பி.டி.ப...
|
|