புகையிலை உற்பத்தியை தடை யாழ். விவசாயிகள் மீது மேற்கொள்ளப்படும் சதி! ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விவசாயி ஆதங்கம்!

புகையிலையினைத் தடை செய்வது என்பது யாழ்ப்பாணத்தவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சதித்திட்டமாகவே நாம் கருதுகின்றோம். புகையிலை செய்து எங்களை வாழவிடுங்கள். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலே இருங்கள் என பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விவசாயி ஒருவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் புகையிலை தொடர்பில் ஆராயப்பட்ட போது விவசாயி ஒருவர் இவ்வா தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எந்த மண்ணுக்கு எந்த தண்ணிக்கு எந்த பயிர் என்ற அடிப்படையில் நாம் பயிர் செய்கிறோம். எமது பணப்பயிர் புகையிலை. அதனைச் செய்து எம்மை வாழவிடுங்கள் எனக் கூறினார்.
Related posts:
கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது!
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக பெற் நடவடிக்கை – இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் - ...
வழிப்பறி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் ஐவர் கைது!
|
|