புகையிலைக்கு மாற்றுப்பயிராக மரமுந்திரிகை!

Saturday, October 7th, 2017

வடக்கு மாகாணத்தில் புகையிலைக்கு மாற்றுப் பயிராக மரமுந்திரிகையை பயிரிடுவது தொடர்பில் மண்ணின் தன்மை ஆராயப்படவுள்ளது என வடக்கு விவசாய அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஈ.சுரேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டறியும் நிகழ்வு தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகின்றது. இதன் போது விவசாயிகளின் பிரச்சினைகள் அவர்களின் சம்மேளனங்கள், சங்கங்கள் ஊடாக முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது புகையிலைக்குப் பதிலாக மாற்றுப்பயிர் வேண்டும் என்பதாகும்.

2020 ஆம் ஆண்டு புகையிலை பயிரிடுவதை முற்றாகத்தடை செய்யவேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் முதன்மை வாழ்வாதாரப் பணப்பயிராக இது உள்ளது. ஆகவே இதற்கான மாற்றுப் பயிர் வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்திருந்தனர். எனவே இதற்குப் பதிலாக மரமுந்திரிகையை பயிரிடுவது தொடர்பில் தீவகப் பகுதிகளில் மண் பரிசீலனை செய்யப்படவுள்ளது.

Related posts: