புகையிலைக்குப் பதிலாக மாற்றுப்பயிர் செய்ய விரும்புவோர் விபரங்கள் சேகரிப்பு!
Saturday, August 11th, 2018யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் புகையிலைச் செய்கைக்கான மாற்றுப் பயிர்கள் மற்றும் மாற்றுப் பயிர் செய்ய விரும்புவோரின் விபரங்கள் திரட்டப்படுகின்றன.
புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்படும் கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து பிரதேச செயலகங்கள் ஊடாக இத்தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு புகையிலைச் செய்கைக்கு பதிலாக மாற்றுப் பயிர் செய்ய விரும்புவோர் விபரம், மாற்றுப் பயிராக பயிரிட விரும்பும் பயிர் வகை, அதற்குத் தேவையான உதவிகள் ஆகிய விபரங்கள் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புகையிலைச் செய்கைகள் மாற்றுப் பயிர்ச்செய்கைக்கு உதவி பெறுவோர் எதிர்காலத்தில் புகையிலைச் செய்கையை மேற்கொள்ள மாட்டேன் என உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
படகுகளை விடுவிக்கும் எண்ணமில்லை - அமைச்சர் மஹிந்த அமரவீர
பிரதமர் ரணில் - அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கு தலா 5 லட்சம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 230 வீடுகளுக்கு தேசிய வீடமைப...
|
|