புகையிரத பாதை இழப்பீடு குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

Friday, June 9th, 2017

 

1985 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட வடக்கு புகையிரதப் பாதையின் இழப்பீடு தொடர்பில் இதுவரை எந்தவித கணிப்பீடுகளும் செய்யப்படவில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அமைச்சு அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து மஹிந்த ஆதரவு பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு, பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்க மேற்கண்டவாறு பதிலளித்தார்.

1985, 1986ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து கணிப்பீடு செய்வது சாத்தியமற்ற ஒன்றாகுமென தெரிவித்த அசோக்க அபேயசிங்க, பழைய – மறந்த விடயங்களை கைவிட்டு, தமிழ் – சிங்கள உறவை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் சிந்தியுங்கள் என்றும் குறிப்பிட்டார். அதனை விடுத்து, இனங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் சிந்திக்காதீர்கள் என மேலும் குறிப்பிட்டார்..

கடந்த 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் வடக்கு புகையிரதப் பாதை முதலாவது தாக்குதலுக்கு இலக்கானதுடன், 1986 மார்ச் 25ஆம் திகதி வவுனியா மற்றும் புளியங்குளம் இடையே யாழ்தேவி புகையிரதம் வெடிப்புக்குள்ளாக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: