புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ள விடயம்!
Wednesday, March 4th, 2020இன்றுமுதல் புகையிரத பயணங்களின் போது, முன்கூட்டியே ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான அனுமதி சீட்டுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வெளிநாட்டு கடவுச் சீட்டு இலக்கம் குறிப்பிடப்பட்ட அனுமதிச் சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு தொடருந்து திணைக்களத்தின் விதிமுறைகளுக்கு அமைய ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து பயணிக்க முடியும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, தங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச் சீட்டு இலக்கம் அனுமதிச் சீட்டில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதாக என்பதை பயணிகள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு குறைந்த, தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக பெற்றோரின் அடையாளப்படுத்தல் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|