புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு கோரப்பட்டது விண்ணப்பங்கள்!
Wednesday, June 14th, 2023புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு ஊக்குவிப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா மேம்பாடு மற்றும் இதர நடவடிக்கைகளுக்கான முன்மொழிவுகளை வழங்குமாறு தனியார் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
அதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இதன் கீழ் கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய புகையிரத நிலையங்களை அண்மித்த பகுதிகளில் காணி குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும், மலையகப் பாதையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் தொடர்புடைய ரயில்வே நிலங்களை குத்தகைக்கு பெற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்தக் காணிகளை குத்தகைக்கு விடுவதில், திட்ட முன்மொழிவுகளின் செயல்திறன், அபிவிருத்திச் செயல்பாட்டில் அவற்றின் பங்களிப்பு மற்றும் ரயில்வே திணைக்களத்தின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காதது ஆகியவை கவனத்தில் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|