புகையிரத சாரதிகள் காவலர்கள் பற்றாக்குறையால் புகையிரத போக்குவரத்து பாதிப்பு!

Friday, January 12th, 2018

புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்கள் போதியளவு இன்மையினால் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம்தெரிவித்துள்ளது.

தற்போது ஒரு பிரிவினருக்கு சாரதி பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத ஓட்டுநர் ஒருவரை பயிற்றுவிப்பதற்கு 3 வருடங்கள்தேவைப்படும் எனவும் புகையிரத பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலங்களில் புகையிரத காவலர்கள் இன்மையினால் புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும் நாள் ஒன்றிற்கு 10 புகையிரதசேவைகள் இடை நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: