புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கும்!

Tuesday, May 15th, 2018

புகையிரத கட்டணங்கள் எதிர்வரும் ஜீன் முதலாம் திகதியிலிருந்து 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி தற்போது குறைந்த பட்ச கட்டணமாகவுள்ள 10 ரூபாய் கட்டணம் அதிகரிப்பில்லாத போதும் 10 ரூபாயால் பயணம் செய்யக்கூடியதாகவுள்ள 10 கிலோமீற்றர் தூரத்தை 8 கிலோமீற்றராகக் குறைக்கவுள்ளதாக கட்டணங்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் 10 கிலோ மீற்றராகவிருந்த தூரம் 8 கிலோ மீற்றராக குறைக்கப்பட்டதால் ரயில் நிலையங்களுக்கிடையில் 10 ரூபாயாகவிருந்த கட்டணம் 15 ரூபாயாக அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

Related posts: