புகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு!

புகையிரத ஊழியர்களின் சம்பள ஏற்றத்தாழ்வுகளை தீர்ப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கூறினார். போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தொழில்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்த யோசனைக்கு பொது நிர்வாக அமைச்சினதும், நிதியமைச்சினதும் ஆலோசனைகள் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கடந்த 21ம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.
இதற்கமைய தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்று சம்பள ஆணைக்குழுவின் ஊடாக உரிய மேற்பார்வையை சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் இதேவேளை நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் தலைவர் ஐ.எல்.கே.திசாநாயக்க தெரிவித்தார்.
Related posts:
|
|