புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு!

Monday, September 19th, 2016

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம்தயாராகி வருவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இதன்மூலம் புகையிரத நிலையங்களின் சேவைகளை இலகுவாக்க முடியும் என புகையிரதபொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். குறித்த இலத்திரனியல் அனுமதிச்சீட்டுகளின் நிமித்தம் புகையிரத நிலையங்களுக்குஇரண்டு இயந்திரங்கள் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு இயந்திரம் புகையிரத நிலையங்களின் அலுவலகங்கள் ஊடாக பயணிகளுக்குஅனுமதிச் சீட்டுகளை வழங்கவும், மற்றைய இயந்திரம் பயணிகள் தாமாகவே பணத்தினைசெலுத்தி அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

இன்னும் 6 மாதங்களுக்குள் இந்த புதிய திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது நடைமுறையில் உள்ள அனுமதிச் சீட்டுகளினால் புகையிரதநிலையங்களுக்கு கிடைக்கும் வருமானங்களை கணக்கிடுவதற்கு ஒரு மாதத்திற்கு மேலானகாலம் எடுப்பதாகவும், குறித்த இலத்திரனியல் இயந்திரப் பாவனையால் அதுஇலகுவாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vikki and Matt go to Chester Zoo (by train)

Related posts: